விமான நிலையங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் - ராஜ்யசபாவில் மத்திய இணையமைச்சர் வி.கே.சிங். தகவல்

x

விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயை, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி கே சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரணாசி, அமிர்தசரஸ், ஜோத்பூர், ராஞ்சி, சென்னை, திருப்பதி உட்பட நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை, 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை, இந்திய விமான நிலைய ஆணையம் குத்தகைக்கு விட்டுள்ளது. விமான நிலையங்களின் மேலாண்மை மற்றும் பராமரிப்பு பணிகளில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க மத்திய அரசு முன் வந்துள்ளதாக, மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்