"ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்களுக்கு வரும் கட்டுப்பாடு" - பயிற்சியாளர் டிராவிட் அதிரடி

x

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பணிச்சுமை கண்காணிக்கப்படும் என பயிற்சியாளர் டிராவிட் கூறி உள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களை, தொடர்ந்து ஆட வேண்டாம் என அறிவுறுத்தும் உரிமை பிசிசிஐ-க்கு இருப்பதாக டிராவிட் தெரிவித்து உள்ளார். அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரைக் கருத்தில்கொண்டு, ஒருநாள் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமென்றும் டிராவிட் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்