ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரிக்கை | gnanavel raja | thanthi tv

x

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் பலருக்கு கடன் கொடுத்து, திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணம் அடைந்த‌தால், அவரது சொத்துக்களை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் என்று அழைக்கப்படும் ஆபிஸ் அசைனி நிர்வகித்து, கடனை வசூலித்து வருகிறார். அவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் 2013ம் ஆண்டு வாங்கிய 10 கோடியே 35 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்க கோரி சொத்தாட்சியர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், 18 சதவீத வட்டி, வழக்கறிஞர் கட்டணம் என்று, மொத்தமாக 26 கோடியே 34 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்