CBSE சிலபஸ்ஸில் சில பாடங்கள்நீக்கம்

x

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் பகுதி நீக்கப்படும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அறிவித்து இருந்தது. அதை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த அந்த கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து சில பாடங்கள் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதாவது, அறிவியல் புத்தகத்தில் இருந்து தனிம வரிசை அட்டவணை உள்ளிட்ட பாடங்களும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் எரிசக்திக்கான ஆதாரம் உள்ளிட்ட பாடங்களும் நீக்கப்படுகின்றன. அதேபோல், சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து ஜனநாயகத்தின் முழு அத்தியாயமும் நீக்கப்படுகிறது. பிரபலமான போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஜனநாயகத்தின் சவால்கள் ஆகிய அத்தியாயங்கள் நீக்கப்படுவதாகவும் என்.சி.இ.ஆர்.டி அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்