பாஜக பெண் கவுன்சிலர் நீக்கம் - வானதி ஸ்ரீனிவாசன் அதிரடி அறிவிப்பு
கேரளாவில், காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, பா.ஜ.க தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பா.ஜ.க மகளிரணி தேசிய செயலாளராக கொச்சியை சேர்ந்த பத்மஜா மேனன் செயல்பட்டு வந்தார். இவர் கொச்சி மாநகராட்சி பாஜக கவுன்சிலராகவும் உள்ளார். இந்நிலையில், கொச்சி மாநகராட்சி கூட்டத்தில், கல்வி நிலை குழு தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பத்மஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைமை விசாரணை நடத்திய நிலையில், மகளிர் அணி தேசிய செயலாளர் பதவியில் இருந்து பத்மஜா நீக்கப்பட்டுள்ளதாக, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார்.
Next Story
