மதம் கடந்த நவராத்திரி விழா - மனம் நெகிழ வைத்த குழந்தைகள்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் 4-வது நாள் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்ட கொலுவில், இஸ்லாமிய குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை, முருகன் வேடம் அணிவித்து, பள்ளி வளாகத்தில் பூஜை செய்து பிரசாதம் வழங்கி கொண்டப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இஸ்லாமிய குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் கடவுள்களின் வேடத்துடன் அனுப்பி வைத்தனர். விழாவில் படைத்த பிரசாதத்தை குழந்தைகள் சாப்பிட்ட காட்சி பார்த்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.
Next Story
