ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த கர்ப்பிணி குடும்பத்துக்கு நிவாரணம்

x

ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த கர்ப்பிணி குடும்பத்துக்கு நிவாரணம்

சிவகங்கை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்த கர்ப்பிணி மற்றும் அவருடைய தாயாரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கினார். இரண்டு நாள்களுக்கு முன்பு இளையான்குடி அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில், நெஞ்சாத்தூரைச் சேர்ந்த விஜயலட்சுமியும், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருடைய மகள் திருச்செல்வியும் உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலையை, அவர்களின் வீட்டுக்குச் சென்று கே.ஆர்.பெரியகருப்பன் நேரில் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்