விடுதலையான தலைவர்கள்.. பட்டாசு வெடித்து, தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்

x

கைது செய்யப்பட்டு விடுதலையான மீனவர்களை சென்னை நொச்சிக்குப்பம் மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர். யாருக்கு அந்த வரவேற்பு? என்பதைத் தற்போது பார்க்கலாம்...

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், நொச்சிக் குப்ப மீனவர்கள் மற்றும் அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காகவு ஆயிரத்து 118 குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால் அவற்றில் 540 வீடுகள் தற்போது டும்மிங் குப்பம் மற்றும் செல்வராஜ்புரம் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் அமைதி வழியில் 4 நாட்கள் அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ தலைவர்கள் பாரதி, ரூபேஸ்குமார், கோசுமணி மற்றும் ரவிக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் நால்வரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நொச்சிகுப்பத்தில் மீனவ மக்கள் பேனர் வைத்து, பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து, பூ தூவி உற்சாகமாக வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்