கமல் நடிக்கும் "இந்தியன் 2'படத்தின் வெளியான அப்டேட்

x

இந்தியன் 2 திரைப்படத்தில் டி - ஏஜிங் (DE - AGING) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில், இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் படத்தில் பயன்படுத்துவதற்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை, அமெரிக்காவில் உள்ள லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்தில் ஆராய்ந்து வருவதாக, இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் கமலை இளமையாக காட்ட டி - ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான பணிகளே தற்போது லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்தில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்