கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் நிபந்தனையில் தளர்வு

x

ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் கைதான பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் நிபந்தனையை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த சூழலில் இவர்கள் 5 பேரும் நிபந்தனையை தளர்த்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன்பாக ஆஜராகி கையெழுத்திடும்படி நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்