இளைஞரை கை, கால்களை கட்டி சாலையில் போட்ட உறவினர்கள்.. வெளியான வீடியோவால் பரபரப்பு

x

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே படியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏசையன். இவருக்கும் ஆனந்த் என்பவரின் தாய்க்கும் சொந்தமாக வீடு உள்ளது. ஏசையனின் அக்கா மகன் தான் ஆனந்த். சொத்தில் பாகப்பிரிவினை ஏற்படுத்தப்பட்ட நிலையில் ஆனந்தின் தாய்க்கு வர வேண்டிய பணத்தை ஏசையன் தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏசையன் வீட்டிற்கு சென்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று நேரில் சென்று கேட்டுள்ளார் ஆனந்த். அப்போது அங்கே இருந்தவர்கள் நைலான் கயிற்றால் ஆனந்தின் கை மற்றும் கால்களை கட்டி சாலையில் படுக்க வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பும் புகார் அளித்த நிலையில் ஆனந்தின் தம்பி ஜெயக்குமார் என்பவரை காங்கேயம் போலீசார் கைது செய்தனர். இதனிடையே ஆனந்தை அவர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்