ஆப்ரேஷன் மறுவாழ்வு.. பிச்சை எடுப்பவர்களுக்கு புதிய வாழ்க்கை

x

ஆப்ரேஷன் மறுவாழ்வு மூலம், 726 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நகர்புற சாலை சந்திப்புகள், புறவழிச் சாலை, சுங்கச் சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள், குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுப்பது அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தது.

இதைத் தொடர்ந்து, இதனை தடுக்கும் விதமாக ஆப்ரேஷன் மறுவாழ்வு என்னும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பிச்சை எடுக்க ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரர்கள் மற்றும் 16 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 150 பேர், அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மற்ற அனைவரும் மறுவாழ்வு மையம், குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு மக்களை ஈடுபடுத்துபவர்கள், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகள், வீடு புகுந்து திருடும் குற்றவாளிகள் மற்றும் இருசக்கர வாகன திருட்டு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு தணிக்கை நடைபெற்றது.

இதில் 707 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டு, 26 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை பெறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்