இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த குடும்பம் - அகதிகளாக வந்தவர்களிடம் தீவிர விசாரணை

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த குடும்பம் - அகதிகளாக வந்தவர்களிடம் தீவிர விசாரணை
Published on

இலங்கை கிளிநொச்சி பகுதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அகதிகளாக வந்த சிறுமி உட்பட 5 பேரை, மெரைன் போலீசார் மீட்டனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டிலிருந்து ஏராளமானோர் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருகை புரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று இலங்கையிலிருந்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட 5 பேர், ராமேஸ்வரம் சேரான் கோட்டை கெளுத்திக்குண்டு பகுதிக்கு வந்துள்ளனர்.

தகவலறிந்த மெரைன் போலீசார் அவர்களை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், பைபர் படகு மூலம் வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் ஐவரையும் மண்டபம் அகதிகள் முகாமில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com