கரண்ட் இல்லாமல் குளிர்சாதன பெட்டி.. அதுவும் இவ்ளோ கம்மியான விலையா..? கோவையில் சூடு பிடித்த விற்பனை

x

7 நாட்கள் வரை காய்கறி, பால், கறிகளை ப்ரஷ்-ஆக வைத்து கொள்ளும் வகையில், கடந்த 2016ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த குளிர்சாதன பெட்டி, தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த மினி கூல் குளிர்சாதனப் பெட்டி களிமண்ணால் செய்யப்பட்டது என்பதால், மின்சாரம் இல்லாமல் இயங்குகிறது. இது ஆவியாதல் முறை மூலம் சேமிப்பு அறைகளில் இருந்து வெப்பத்தை அகற்றி, அவற்றை குளிர்ச்சியாக வைக்கிறது. இதன் மூலம் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, உணவு, காய்கறிகள் மற்றும் பால் போன்றவற்றை இயற்கையாகவே பல நாட்கள் ப்ரஷ்-ஆக வைத்திருக்க முடியும் என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் நம்பகமான குளிரூட்டும் சாதனமாக பார்க்கப்படும் இந்த களிமண் குளிர்சாதன பெட்டி, உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த தேர்வாக விளங்குகிறது. 8 ஆயிரத்து 500 ரூபாய் முதல் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கும் விற்பனையாளர்கள், உற்பத்தி அதிகரிக்கும்போது விலை குறையும் என்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்