"சிறப்பு வகுப்பில் சுண்டல் தருவதால் புத்துணர்ச்சி..." - மாணவர்கள் நெகிழ்ச்சி பேட்டி

x

அரசுப் பள்ளி மாலை சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் சத்தான திண்பண்டங்கள் வழங்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வை எழுதும் மாணவர் களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை யில் 35 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 10,11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சிறப்பு வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு, தன்னார்வலர்கள், மத அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் சார்பில் சத்தான பண்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பிலும் உதவி வழங்கப்படுகிறது.

மாணவர்கள் தொடர்ந்து படிப்பதால் சோர்வடைந்துபோகக் கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கவேண்டும் என்பதற்காகவும், பச்சைப் பயறு, கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல் ஆகியவை வழங்கப்படு கின்றன.

இதன்மூலம் சோர்வடையாமலும் உற்சாகமாகவும் படிப்பில் கவனம் செலுத்தமுடிகிறது என்கிறார்கள், மேற்கு மாம்பலம் புதூர் மாணவர்கள்.

மாநிலம் முழுவதும் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளுக்கு, அரசே இதைப்போல சத்தான பண்டங்களை வழங்கினால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே அனைத்து மாணவர்களின் கருத்து.


Next Story

மேலும் செய்திகள்