#BREAKING || செஞ்சிலுவை சங்க முறைகேடு - ரூ3.37 கோடி சொத்துகள் முடக்கம் | red cross

x

செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான ₹ 3.37 கோடி அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது....

செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையில் நடைபெற்ற நிதி முறைகேடு தொடர்பாக சிபிஐ கடந்த 2020, டிசம்பர் 28-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்ததது. இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற புலன் விசாரணையில், செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் தலைவர் ஹரிஷ் எல். மேத்தா, முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன், முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம். நசுருதீன் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது தெரியவந்துது. இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு சொந்தமான ரூ. 3.37 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்