கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் Red Alert எச்சரிக்கை..! பள்ளி கல்லூரிக்கு விடுமுறை

கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக எர்ணாகுளம், காசர்கோடு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள எர்ணாகுளம், காசர்கோடு மாவட்டங்களில், கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தணம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் இரவு நேர பயணம் மற்றும் மலையோர சாலைகளில் பயணங்களை தவிர்க்குsமாறும், மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளிலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுக்க வாய்ப்புள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது. கடல் அலைகளும் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com