மகாராஷ்டிராவுக்கு RED Alert - அபாய கட்டத்தை தாண்டிய நதிகள்

x

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், பெரும்பாலான நீர்நிலைகள் அபாய கட்டத்தை எட்டியுள்ளன. ராய்காட் பகுதியில் கனமழை காரணமாக ரசயணி காவல்நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. அந்த மாவட்டத்தில் உள்ள சாவித்திரி, அம்பா, பட்லகங்கா ஆகிய மூன்று நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் என்டிஆர்எப் குழுவினர் தயார்நிலையில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்