"மீன்பிடிக்க சென்ற கணவரை மீட்டு தாருங்கள்" - ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை...

x

பக்ரைன் நாட்டில் மீன்பிடிக்க சென்று மாயமான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 2 மீனவர்களை மீட்ககோரி, இருவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடியபட்டணத்தை சேர்ந்த சகாய செல்சோ, ஆண்டனி வின்சென்ட் இருவரும், பக்ரைன் நாட்டில் தராக் மாஜித் என்பவரிடம் மீன்பிடிப்பு வேலைக்காக சென்றனர். கடந்த 17-ம் தேதி மொராக் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற இருவரும், இதுவரையில் கரைக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இரண்டு மீனவர்களின் குடும்பத்தினரும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். இருவரையும் மீட்டுத்தரும்படி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்