"போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தயார்" - பாக். அரசுக்கு முக்கிய தகவல்

x

பாகிஸ்தான் அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாக தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தெரிவித்துள்ளது. தங்கள் போராளிக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை பாகிஸ்தான் அரசு நிறுத்தாவிட்டால் அந்நாட்டு பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் இருவரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என டிடிபி அமைப்பு தொடர் அச்சுறுத்தல்கள் விடுத்து வந்த நிலையில், அவ்வமைப்பால் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதாக தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் பேரணி நடத்தினர். இந்நிலையில், டிடிபியின் தலைவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஆப்கானிஸ்தான் மூலம் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்