"அதிமுக உழைப்பால் உயர்ந்தவர்களை அபகரிப்பதா?" - ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்

x

"அதிமுக உழைப்பால் உயர்ந்தவர்களை அபகரிப்பதா?" - ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்


அதிமுக தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்தவர்களை, அபகரித்துக்கொண்டு, அதிமுகவையே விமர்சிப்பது சர்வாதிகார போக்கின் உச்சம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதலமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், ஆட்சியின் அவல நிலையை எடுத்துக் கூற எதிர்க்கட்சித் தலைவருக்கு தார்மீக உரிமை உண்டு என தெரிவித்தார். மேலும் அதிமுகவில் பயிற்சி பெற்று தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்தவர்களை அபகரித்து கொண்டு, அதிமுகவையே விமர்சிப்பது மிகப்பெரிய தவறு எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்