வலி நிவாரணி மருந்தை பயன்படுத்திய ஜடேஜா... ஐசிசி விதிகளை மீறியதாகப் புகார்...

Published on

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக, இந்திய வீரர் ஜடேஜாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. போட்டியின்போது நடுவர்களிடம் தெரிவிக்காமல் வலி நிவாரணி மருந்தை கைவிரலில் ஜடேஜா தடவினார். ஆனால், பந்தை சேதப்படுத்தும் வகையிலான பொருளை ஜடேஜா தடவியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக இந்திய அணி உரிய விளக்கம் அளித்தது. இந்நிலையில், ஜடேஜா ஐசிசி விதிகளை மீறி இருப்பதாகவும், அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், ஐசிசி தெரிவித்து உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com