"இனி கையில் காசு இல்லை என்ற கவலை வேண்டாம்" - ரேஷன் கடைகளில் வருகிறது அதிரடி மாற்றம்

x

அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 683 நியாய விலைக் கடைகளிலும் (QR Code) குறியீடு மூலம் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்

கோவை, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, மதுரை, சென்னை, வேலூர், உள்ளிட்ட 12 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் இன்னும் ஒரு வாரத்தில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இம்மாத இறுதிக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்