பைக் வாங்கி தராததால் மில்க் சேக்கில் எலி பேஸ்ட்...- சாகும் வீடியோவை நண்பர்களுக்கு ஷேர் செய்த இளைஞர்

x

தஞ்சையில் இருசக்கர வாகனம் வாங்கித் தரவில்லை என்பதற்காக, எலி பேஸ்ட்டை மில்க்சேக்கில் கலந்து குடித்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழவாசல் பகுதியை சேர்ந்த நந்தகுமார், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் விலையுள்ள இருசக்கர வாகனத்தை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர், மில்க்சேக்கில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். எலி பேஸ்ட்டை மில்க் சேக்கில் கலந்து குடிப்பதை உயிரிழந்த நந்தகுமார், செல்பி வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்