"19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன"...சென்னை போலீஸ் பதிலால் நீதிபதி ஷாக் - விடுதலையான 3 பெண்கள்!

x

"19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன"...சென்னை போலீஸ் பதிலால் நீதிபதி ஷாக் - விடுதலையான 3 பெண்கள்!


சென்னையில் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 19 கிலோ கஞ்சா வை எலிகள் தின்றதாக போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், 4 வருடங்களுக்கு முன்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்களை போலீசார் கைது செய்து, 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். 3 பெண்களும் ஜாமினில் வெளி வந்த நிலையில், கஞ்சாவை கைப்பற்றிய போலீசாரிடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சாவை காட்சிப்படுத்துமாறு நீதிபதி ஜூலியட் புஷ்பா உத்தரவிட்டார்.

ஆனால், நீதிமன்றத்தில் 11 கிலோ கஞ்சாவை சமர்பித்த போலீசார், மீதம் 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றதாகவும், மழையால் சேதமடைந்ததாகவும் அறிக்கை அளித்தனர்.

இதையடுத்து, சாட்சியங்களை போலீசார் முறையாக சமர்ப்பிக்காத காரணத்தால், 3 பெண்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே, உத்தரபிரதேசத்தில் கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாக ​ே​அம்மாநில போலீசார் கடந்த டிசம்பரில் கூறிய நிலையில், தற்போது சென்னையிலும் அதே போன்ற தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்