சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியில், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணி என்கிற மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் ஆனைமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, குற்றவாளி மணிகண்டனுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்