ரஞ்சி கோப்பை கிரிக்கெட்.. ரன்களை அள்ளிக்குவித்த தமிழக வீரர்கள்

x

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி 203 ரன்கள் குவித்துள்ளது.

ஹைதராபாத் அணி முதல் இன்னிங்சில் 395 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி, 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் குவித்துள்ளது.

அபாரமாக விளையாடி சதமடித்த தமிழக வீரர் ஜெகதீசன் 116 ரன்களுடனும், சாய் சுதர்சன் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 192 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்