மகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தை... கொடூரமாக குத்திக்கொன்ற இளைஞர்கள்...!- ராணிப்பேட்டை அருகே பயங்கரம்

x
  • ராணிப்பேட்டையில், மகளை கிண்டல் செய்ததால் தட்டிக்கேட்ட தந்தையை 2 இளைஞர்கள் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுந்தரேசன், தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
  • இவரது மகள் லில்லி, அங்குள்ள அரசினர் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி கல்லூரிக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த அஜித், சரண் ஆகிய இருவர் கிண்டல் செய்துள்ளனர்
  • . இதனைக் கண்ட மாணவியின் தந்தை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரேசனை கடுமையாக தாக்கினர்.
  • இதில் பலத்த காயமடைந்த சுந்தரேசன், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • இளைஞர்கள் இருவரும் தலைமறைவான நிலையில், சிகிச்சை பலனின்றி சுந்தரேசன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித் மற்றும் சரண் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்