திடீரென கோர்ட்டுக்குள் பரவிய நச்சுவாயு..! - மூச்சுத்திணறலால் மயங்கிய வழக்கறிஞர்... ராணிப்பேட்டையில் பரபரப்பு
• ராணிப்பேட்டையில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவால் வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
• ராணிப்பேட்டை ஒருங்கிணிந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகே உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
• இந்நிலையில, தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயு, நீதிமன்ற வளாகத்திற்குள் பரவியுள்ளது.
• இதில், ஜான் சாலமன் என்ற வழக்கறிஞருக்கு மூச்சுத் திணறல் உடல் நலம் பாதித்தது.
• உடனடியாக அவரை மீட்ட சக வழக்கறிஞர்கள், வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
• இதனால், நீதிமன்றம் வளாகத்தில் சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது
