ஜேசிபி மீது விழுந்த ராட்சத தொட்டி...நொடி பொழுதில் உயிர் தப்பிய டிரைவர்- பதைபதைக்கும் காட்சி

x

ராமநாதபுரம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றிய போது, நீர்த்தேக்க தொட்டி ஜேசிபி மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், சித்திரங்குடி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 30 ஆயிரம் லிட்டர் நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டிருந்தது. இதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக, நீர் தேக்க தொட்டி இடிந்து ஜேசிபி மீது விழுந்தது. இதில் சாமர்த்தியமாக செயல்பட்டதால் ஜேசிபி ஓட்டுநர் நொடிப்பொழுதில் உயிர் தப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்