மீண்டும் உயிர் பெறும் ராம்குமார் தற்கொலை வழக்கு

x

கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் மின் வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லையா? என்பதை கண்டறிய, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டுமென தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், ராம்குமாரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ள மனித உரிமை ஆணையம், சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அதிகாரிகளை பணியமர்த்தவும் பரிந்துரைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்