தென்னிந்தியாவில் ராமர் கோவில்.. பாஜகவின் தேர்தல் தந்திரமா?

x
  • உத்தரபிரதேசத்தை போல தென்னிந்தியாவில் ராமர் கோவில் கட்டப்படும் என அறிவித்திருந்த கர்நாடக அரசு, தற்போது கர்நாடகாவில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலின் மாதிரி குறித்த காணொளியை வெளியிட்டு உள்ளது.
  • கர்நாடக மாநிலம் ராமநகரில் உள்ள ராமதேவரா மலையில் ராமர் கோவில் கட்ட கர்நாடக அரசு முன் வந்தது.
  • இதையடுத்து ராமர் கோவில் கட்டப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது
  • . இதைத்தொடர்ந்து இந்த கோவிலை வடிவமைக்கும் வரைப்படம் உருவாக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.
  • இந்த பணிகள் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் தலைமையில் நடைபெற்றது.
  • அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளை மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் பார்வையிட்டு, ராமநகரில் கோவில் கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
  • இந்த நிலையில், ராமர் கோவிலின் கட்டிட வரைபட வீடியோவை அமைச்சர் அஸ்வத் நாராயண் வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்