ராமநாதபுரம் கடற்கரையில் பரபரப்பு..கடலுக்குள் வீசிய தங்கக்கட்டி..?தப்பியோடிய கும்பல் | Ramanathapuram

ராமநாதபுரம் கடற்கரையில் பரபரப்பு..கடலுக்குள் வீசிய தங்கக்கட்டி..?தப்பியோடிய கும்பல் | Ramanathapuram
Published on

ராமநாதபுரத்தில், கடலுக்குள் தங்கத்தை கடத்தல்காரர்கள் வீசியதாக கிடைத்த தகவலின்பேரில், ஸ்கூபா மற்றும் முத்துக்குளிக்கும் நபர்களை கொண்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கக் கட்டிகளை ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே, நொச்சி ஊரணி கடற்கரையில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். படகைவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பிச் சென்ற நிலையில், கடலுக்குள் தங்கக்கட்டி பார்சல் வீசப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ஸ்கூபா வீரர்கள், தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் நபர்கள் 10க்கும் மேற்பட்டோர், நொச்சி ஊரணி கடற்கரைப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்கத்தை தேடும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

X

Thanthi TV
www.thanthitv.com