முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு.

x

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு.


தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் சந்திரபாபு நாயுடுவை, அவரது இல்லத்தில் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்துள்ளார். தனது நண்பரும் தலைவருமான ரஜினியை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும், அரசியல் எதுவும் பேசவில்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்