புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க ரஜினிகாந்திற்கு அழைப்பு

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள கர்நாடக ரத்னா விருதை வழங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

நவம்பர் 1-ஆம் தேதி இந்த விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவரது கரங்களால் விருது வழங்கப்படவுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com