கொட்டி தீர்த்த மழை.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் புகுந்த மழைநீர் - பக்தர்கள் அவதி

x

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை சுமார் 7.5 சென்டிமீட்டர் அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதுடன், பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் முதல் பிரகாரத்தில், தட்டோடுகளில் இருந்து வடிந்த மழைநீர், பிரகாரத்தின் உள்புறத்தில் குளம்போல் தேங்கியது.

பக்தர்கள் தேங்கி நிற்கும் மழைநீரில் நின்று சாமி தரிசனம் செய்யும் நிலையில், மழைநீரை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்