சுட்டெரிக்கும் சூரியனுக்கு பதிலடி கொடுக்க வந்த மழை..குஷியான நெல்லை மக்கள்

நெல்லையில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பலத்த மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மனம் குளிர்ந்தனர்... இன்று காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகல் 1 மணியளவில் மாநகரின் பல பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது... குறிப்பாக பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், சமாதானபுரம், தச்சநல்லூர் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெக்கை தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com