ரயிலுக்கும் பிளாட்பார்முக்கும் இடையே சிக்கி வலியில் துடிதுடித்த கல்லூரி மாணவி - மீட்கப்பட்டாரா?

x

ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் அருகே ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது மாணவி ஒருவர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் மாட்டிக் கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

துவ்வாடா ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து ஒரு மாணவி கீழே இறங்க முயன்றார். அப்போது கால் தவறி நடைமேடை இடுக்கில் அந்த மாணவி மாட்டிக் கொண்டார்.

நல்வாய்ப்பாக இதை கவனித்த ரயில்வே போலீசார் மற்றும் சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்தி அந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது


Next Story

மேலும் செய்திகள்