புதிய பாஸ்போர்ட்டில் ராகுல் அமெரிக்காவுக்கு திடீர் பயணம் - இதுதான் ரகசியமா..?

x

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு, அரசு பங்களாவையும் காலி செய்ய நேரிட்டது.

இதையடுத்து, தனது சிறப்பு பாஸ்போர்ட்டை ராகுல் காந்தி ஒப்படைத்தார்.

அமெரிக்க பயணத்திற்காக புதிதாக சாதாரண பாஸ்போர்ட் வழங்கக்கோரி விண்ணப்பித்ததுடன், நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால், தடையில்லா சான்று கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 10 ஆண்டுகளுக்கு பதிலாக, 3 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட்டு வழங்க, தடையில்லா சான்று வழங்கியது.

நேற்று பிற்பகலில் பாஸ்போர்ட் கிடைக்கப்பெற்ற நிலையில், இன்று மாலை ராகுல் காந்தி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

வாஷிங்டன், நியூயார்க் நகரங்களுக்கும் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்