நடைபயணத்தில் கடிதம் எழுதிய ராகுல்... உடனே உறுதி கொடுத்த முதல்வர்... கர்நாடகாவில் சுவாரஸ்யம்
கர்நாடக மாநிலத்தில் வனப்பகுதியில் காயமடைந்த குட்டி யானைக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, ராகுல் காந்திக்கு பதில் அளித்துள்ளார். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, நாகர்ஹோலே வனப்பகுதியை பார்வையிட்டபோது, அங்கிருந்த குட்டி யானையின் வால் மற்றும் தும்பிக்கையில் அடிபட்டிருந்ததைக் கண்டார். இதையடுத்து, அந்த யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு அவர் கடிதம் எழுதினார். அதற்குப் பதில் கடிதம் எழுதியுள்ள பசவராஜ் பொம்மை, உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று பதில் அளித்துள்ளார்.
Next Story
