முன்னாள் முதல்வர் வீட்டிற்கு குடியேறும் ராகுல் - பின்னணி என்ன?

x

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விரைவில் கிழக்கு நிசாமூதீன் பகுதியில் உள்ள டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித்துக்கு சொந்தமான இல்லத்தில் குடியேற உள்ளார்.

துக்ளக் லேன் பகுதியில் ராகுல் காந்திக்கு அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டிருந்த பங்களாவை கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்தி காலி செய்தார். தற்போது அக்பர் சாலையில் உள்ள அவரது தாயார் சோனியா காந்தியின் இல்லத்தில் ராகுல் காந்தி வசித்து வருகிறார். இந்த நிலையில் கிழக்கு நிஸாமுதீன் பகுதியில் உள்ள புதிய இல்லத்தில் ராகுல் காந்தி விரைவில் குடியேற உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்