செங்கோல் குறித்து அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்திற்கு மத்திய அரசு தீர்வு காணாமல் செங்கோல் வைப்பதாக, ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
எல்லாம் தெரியும் என நினைப்பவர்களால் இந்தியா ஆளப்படுவதாக விமர்சித்தார்.
இந்தியாவில் ஏழைகளும், சிறுபான்மையினரும் உதவியற்று நிற்பதாக குறிப்பிட்டார்.
தனது இந்திய ஒன்றுமை யாத்திரையை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்தியர்கள் எப்போதும் ஒருவரையொருவர் வெறுப்பதை விரும்ப மாட்டார்கள் என்றும், ஊடகங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சிறிய கூட்டம்தான், வெறுப்பை பரப்பிவிடுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் விலைவாசி, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் செங்கோல் வைப்பதாக ராகுல் காந்தி குறைகூறினார்.
