படகு போட்டியில் துடுப்பை வேகமாக செலுத்திய ராகுல் காந்தி சீறிப்பாய்ந்த படகு

x

அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்கத்துடன் பணியாற்றினால், சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை என, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னமடா ஏரியில் நடைபெற்ற பாம்பு படகு போட்டியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். போட்டியில் பங்கேற்ற அவர், துடுப்பை வேகமாக செலுத்த, படகு சீறிப்பாய்ந்து சென்றது.

இந்த போட்டியை கண்ட பார்வையாளர்கள் உற்சாகமாக கையசைத்தனர்.

இந்த வீடியோவை ராகுல்காந்தி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்