இந்திய ஒற்றுமைப் பயணம் நிறைவு : இல்லம் திரும்பிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

x

இந்திய ஒற்றுமைப் பயணத்தை நிறைவு செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது இல்லத்துக்குத் திரும்பினார்.

காஷ்மீரில் தனது பயணத்தை நேற்று ராகுல் காந்தி நிறைவு செய்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தனது இல்லத்துக்கு ராகுல் காந்தி இன்று திரும்பினார்.

அப்போது, அவரது இல்லம் முன்பாக திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள், ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்