ராகுல் காந்தி மேல் முறையீடு விவகாரம்... "அநீதிக்கு எதிராக கண்டிப்பாக போராடுவோம்.." - மல்லிகார்ஜுன கார்கே

x

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அவை நடவடிக்கைதில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்ய இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், நீதிமன்ற தீர்ப்ப்பின் மீது வாதம் செய்ய முடியாது எனவும், ஆனால் அநீதிக்கு எதிராக போராட முடியும் என்றும் தெரிவித்தார். அதானி விவகாரத்தில் சிக்குண்டுள்ள மத்திய அரசு, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க விரும்பவில்லை எனவும், அதனால் வேண்டுமென்றே அவையை நடத்தக் கூடாது என திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்