வழிப்பாதையிலிருந்து விலகி நிற்க கூறியதால் ஆத்திரம் - இரு தரப்பினரிடையே நடந்த பயங்கர மோதல்

வழிப்பாதையிலிருந்து விலகி நிற்க கூறியதால் ஆத்திரம் - இரு தரப்பினரிடையே நடந்த பயங்கர மோதல்
Published on

சேலம் அருகே வழிப்பாதையை விட்டு விலகி நிற்க கூறிய தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வழிப்பாதையில் இளைஞர்கள் சிலர் நின்றுள்ளனர்.

அவர்களிடம் ஆனந்த் விலகி நிற்குமாறு கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஆனந்தை சரமாரியாக தாக்கினர்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு ஆனந்தின் சகோதரர்கள் வந்ததை அடுத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com