விண்வெளிக்கு சென்ற ரேடியோ சிக்னல்.."நம்மோடு தொடர்பு கொள்ளும் ஏலியன்ஸ்

x

பிரபஞ்சத்தில் உள்ள கோடானு கோடி கிரகங்களில், ஏதாவது ஒன்றில் உயிரினங்கள் இருக்கலாம் என்று பலரும் நம்புகின்றனர். வேற்று கிரகவாசிகள் பற்றிய தேடல்கள் பல ஆண்டுகளாக தொடர்கின்றன. 1972இல் பயனீர் 10 என்ற நாசா விணகலம் விண்ணில் ஏவப்பட்டு, 2003 வரை செயல்பட்டது. பயனீர் விணகலத்திற்கு நாசா நிறுவனம்

ரேடியோ அனுப்பிய செய்தி ஒன்று, 2002இல், பூமியில் இருந்து

27 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு செயல் இழந்த வெள்ளை நட்சத்திரத்தை சென்றடைந்தை கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். அந்த நட்சத்திரத்திற்கு அருகே உள்ள கிரகங்களில் வேற்று கிரகவாசிகள் இருந்து, அவர்கள் இதற்கு பதில் தகவல் ரேடியோ அலைகள் மூலம் அனுப்பியிருந்தால், அது 2029இல் பூமியை வந்தடையும் என்று கூறுகின்றனர். இதே போல 40 ஆண்டுகளுக்கு முன்பு வாயேஜர் 2க்கு சென்றடைந்த ரேடியோ சிக்னலுக்கு பதில் கிடைத்தால், அது அடுத்த பத்தாண்டுகளில் பூமியை வந்தடைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்