"பருப்பு வகைகளை கிடங்குகளில் பதுக்கி வைக்க கூடாது" - ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

x

பருப்பு வகைகளை கிடங்குகளில் அதிக நாள்கள் பதுக்கி வைத்தால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பருப்பு குடோனில், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருப்பு வகைகளை கிடங்குகளில் பதுக்கி வைப்பதால், விலைவாசி உயரும் எனவும் பதுக்கி வைப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்