அடுத்தடுத்து பாய்ந்த கேள்விகள்.. பதில் சொல்ல திணறிய அஸ்வின்.. டென்ஷனில் பேசியதால் பரபரப்பு

x

ஆன்-லைன் ரம்மி தடை பற்றிய கேள்விக்கு ஹெட் லைன்ஸ் வேணுமா...? உண்மை வேணுமா? என கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆவேசமான விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.

சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின், இந்தியர்கள் மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல... விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலான சமூக பணியையும் இணைந்து செய்பவர்... அஸ்வின் நடத்தி வரும் 22 yards மற்றும் gen next நிறுவனங்கள் கூட்டாக கோடை கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சியை வழங்குகிறது.

இந்த பயிற்சி குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்-லைன் விளையாட்டில் சூதாட்டம் இல்லை என ஆவேசமானவர், இந்தியாவில் ஆன்-லைன் கேம் தடை செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பியதுடன், தடை செய்யப்பட்டுள்ளது என்றால் விளையாடாதீர்கள் என்றார்.

தமிழகத்தில் பலரது உயிரை குடித்த ஆன்-லைன் சூதாட்டங் களை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு, தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போதுதான், ஆன்-லைன் விளையாட்டில் சூதாட்டம் இல்லை எனக் கூறியிருக்கிறார் அஸ்வின்...

- அஸ்வின், கிரிக்கெட் வீரர்





Next Story

மேலும் செய்திகள்