மரத்தில் QR Code... ஊட்டி செல்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ் | qr code

x

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அரிய வகை மரங்களின் விபரங்களை அறிந்து கொள்ள மரத்தின் மீது க்யூ ஆர் கோட் ஸ்கேனர்கள் பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. தாவரவியல் பூங்காவில் உள்ள அரிய வகை மற்றும் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, பூங்காவில் உள்ள

ஒவ்வொரு மரத்தின் தகவல்களை விரைவு துலங்கி எனப்படும் க்யூஆர்., கோட் மூலம் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பூங்கா பராமரிப்பு நிதி ரூ.2.25 லட்சம் மதிப்பில் பூங்காவில் உள்ள மரங்களின் பெயர்கள், தாவரவியல் பெயர், எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது, அதன் தமிழ் பெயர் மற்றும் அவற்றின் பயன்கள் என ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்டு கியுஆர் கோட் ஸ்கேனர் பதாகைகள் ஒவ்வொரு மரத்திலும் பொருத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஜப்பான் ரோஸ் என்று அழைக்கப்படும் கமேலியா, டிராகன் டீரிஸ் எனப்படும் முட்டை கோஸ் மரம், மங்கி பசில் டீரி எனப்படும் குரங்கேரா மரம், ருத்திராட்சை மரம் உள்ளிட்டவற்றில் பொருத்தப்பட்டுள்ளன. பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்